அன்பான கணவன் அழகான மனைவி…?
கணவன் மனைவியின் ஆரோக்கியம் ஒன்று மட்டும்தான் அவர்கள் வாழும் இடத்தை அமைதியாலும், அரவணைப்பாலும், சாந்தியாலும் அலங்கரிப்பதற்கான முதல் காரணமாக அமைகிறது. எமது வீடுகளும் அங்கு வளரும் குழந்தைகளும் ஆரம்பத்திலிருந்தே இறைவனின் வழிகாட்டலால், அவனது சட்டத்தினால் உருவான மனிதப்பண்புகளால் அழகுபடுத்தப்பட வேண்டுமா? அப்படியானால் ஆரோக்கியமான கனவன் மனைவியின் மனங்களில் இருந்துதான் அது உருவாக வேண்டும். தாய், தந்தை எனும் பாத்திரத்திற்கு முன்புள்ள பாத்திரம் தான் கனவன் மனைவி எனும் பாத்திரம். திருமணம் எனும் உறவு ஆரம்பித்த நேரத்தில் இருந்து அவர்கள் பூமியில் வாழ்ந்து மரணிக்கும் வரை இந்த பாத்திரம் பக்குவமாக பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. கணவன், மனைவி எனும் பாத்திரங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் தாய், தந்தை எனும் பாத்திரங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க ஆரம்பிக்கிறது.
ஒன்று ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்றொன்றை ஆரோக்கியமாக ஆக்கமுடியும். ஒரு விளக்கு தொடர்ந்து எறிந்துகொண்டிருந்தால் மட்டும்தான் மற்றொரு விளக்கை எறிய வைக்க முடியும். கனவன் மனைவியின் இதமான இணைப்பு, உயர்வான உறவு, அழகான குடும்பத்தின் அவ்வாறே சாந்திமிகுந்த சமூகத்தின் ஆணிவேராக இருக்கிறது என்பதை நாம் எவரும் மறுக்க மாட்டோம்.
அன்பான தாய், அன்பான தந்தை என்பது குழந்தைகள் தருகின்ற பட்டம். பாசமான கணவன், மனநிறைவு தரும் மனைவி என்பன கணவன் மனைவி பரிமாரிக்கொள்ளும் பட்டங்கள். கணவனின் மனதிற்குள் மனைவியும், மனைவியின் மனதிற்குள் கணவனும் சுகமாக வாழும் போது மட்டும்தான் இந்தப்பட்டங்களின் உண்மைத்தன்மை உணர்வுகளாலும், உடல் மொழிகளாலும் வெளிப்பட ஆரம்பிக்கும்.
‘நான் என் மனைவியின் மனதிற்குள் நாட்காலி விட்டு அமைதியாக அமர்ந்துகொண்டிருக்கும் கனவனா?
நான் என் கனவனின் மனதிற்குள் ஊஞ்சல்கட்டி அழகாக ஆடிக்கொண்டிருக்கும் மனைவியா?
இதற்கான சரியான பதில் உங்கள் மனதிலிருந்து இந்த நிமிடத்தில் வெளிவருவதை நீங்களே உணர்வீர்கள்.’
திருமனம் எனும் பந்தத்தில் நுழையும் கணவனும் மனைவியும் திருமனத்தின் மூலம் ‘மன அமைதியும், ஆறுதலும்’ அடைய வேண்டும் என்பதையே அவர்களின் எதிர்பார்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
‘இன்று எம்மில் எத்தனை பேர் இந்த எதிர்பார்;ப்பால் எழுச்சியைக்கண்டு மகிழ்ந்துகொண்டிருக்கிறோம்? எத்தனை பேர் இந்த எதிர்பார்ப்பால் ஏமாற்றத்தைக் கண்டு மனம் கலங்கிப்போய் இருக்கிறோம்?’
நல்ல தாயாக இருக்க வேண்டும் என்ற ஆசை, நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எம் ஒவ்வொருவருக்கும் இருப்பது போன்று நல்ல மனைவியாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தின் தீர்ப்பால் திருமணமான பிறகு இறைவனின் அருட்பாக்கியத்தால் கிடைக்கும் அற்புதச்செல்வங்கள்தான் குழந்தைகள். அவன் நாடினால் ஆரம்பத்திலேயே அந்தப்பாக்கியத்தால் அவர்களை அழகு படுத்துவான். நாடினால் தாமதிப்பான். நாடினால் பலவாகத் தருவான். நாடினால் தராமல் விட்டுவிடுவான். தருவதும் தராமல் இருப்பதும் இறைவனின் விருப்பமே அல்லது நாட்டமே என்ற நம்பிக்கையை எமது மனதிற்குள்ளே ஆழமாகப் பதிய வைத்திருக்கிறோம். குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கணவன் மனைவி என்கின்ற உறவில் நெருக்கமும் விருத்தியும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறான். மனித சமூகமும் அதைத்தான் விரும்புகிறது.
எமது உடலை, உணர்வை, பொருளை, இரவை, பகலை அர்ப்பணித்து நாம் வளர்த்த குழந்தைகள் ஏதோ ஒரு முறையால் நம்மைவிட்டு பிரிந்து செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் கனவனும் மனைவியும் உடலாலும் உள்ளத்தாலும் பிரிந்து விடுவதையோ அல்லது பிரிந்து வாழ்வதையோ மனித சமூகம் விரும்புவதில்லை. ஏனென்றால் ‘அதுதான் நாட்டின் தேசத்தின் முதுகெழும்பும் தசையும்’. ‘அதுதான் ஒரு குடும்பத்தின் தலையும் இதயமும்’. அதனாலேயே கனவன் மனைவி என்கின்ற இந்தப்பெயர்களைப் பெற்றுத்தரும் திருமனம் சர்வதேச புனிதத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது. அதனாலேயே திருமனம் சந்தோசம், பிரார்த்தனை மிகுந்த விழாவாகவும், சட்டத்தால் இணைக்கப்படவேண்டிய நிகழ்வாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த விலங்குகளுக்கும் இல்லாத மனிதர்களுக்கு மட்டுமே உள்ள இந்த அற்புதமான கணவன் மனைவி இணைப்பு உள்ளம், உடல், உயிர் கலந்த புனிதமான இணைப்பாகும். இங்கு ஒருவர் மற்றவரை முழுமையாக ஏற்றுக்கொள்வதும் ஒருவர் மற்றவருக்காக தன்னை அர்ப்பனிப்பதும் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ப்பணமும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இருக்கும் இடத்தில் தான் அழகான உறவு உருவாக ஆரம்பிக்கிறது.
இந்த உறவு வளர ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையை முழுமையாக பகிர்ந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு சிறிய பெரிய கருமங்களிலும் உறவு வளர்ந்து செல்வதை உணர்வார்கள். ஒன்றாக உரையாடுவார்கள், ஒன்றாக உணவருந்துவார்கள், ஒன்றாக உறங்குவார்கள், ஒன்றாக சிரிப்பார்கள், ஒன்றாக அழுவார்கள், ஒன்றாக முரன்படுவார்கள், ஒன்றாகவே பிரார்த்தனை செய்வார்கள். இப்படிப் பெரும்பாலான விடயங்களில் ஒன்றுபட்டுச்செயற்படுவார்கள். ‘ஏதாவதொன்றைச் சேர்ந்து செய்வோம் என்று எண்ணி செய்வதைவிட எல்லாவற்றையும் சேர்ந்து செய்வோம், எல்லாவற்றிலும் சேர்ந்துகொள்வோம் எனும் எண்ணமும் செயலும் இவர்களிலிருந்து வெளிவரும்.’ இங்கு உண்மையான அன்பும், சேர்ந்த செயற்பாடுகளும் காணப்படும். ஒன்றுபட்ட வாழ்க்கை, ஒருவர் மற்றவரோடு இணங்கி அர்ப்பனித்து வாழும் வாழ்க்கை எவ்வளவு அழகான மனநிறைவைத்தரக்கூடியதாக இருக்கும்.
இந்த மனநிறைவை முதலாவது உணரக்கூடியவர்கள் கணவனும் மனைவியுமே. அவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளை பார்க்கக்கூடியவர்களாக இருப்பது அவர்களின் குழந்தைகளும் உறவினர்களுமே. கணவன் மனைவி என்கின்ற பாத்திரம் அழகான உறவால், ஒற்றுமையால், அன்பால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் குழந்தைகளும், திருமண இணைப்பால் சேர்த்துவைத்த அவர்களின் பெற்றோரும், உறவினர்களும் அடையும் மனஆறுதலின் அளவு எப்படியிருக்கும். தூய்மையாக இணைந்த உள்ளங்களில் இருந்து வெளிவரும் அழகு நிறைந்த உணர்வுகளும், செயல்களும் மற்றவரின் உள்ளங்களில் ஆனந்தம் நிறைந்த அனுபவங்களாக பதிய ஆரம்பிக்கும். அவர்களின் அழகான பிரார்த்தனைகள் கனவன் மனைவி உறவு மேலும் வலுப்பெற துணைபுரியும்.
இந்த கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் உறவு சாதாரண உறவாக இருக்காது. அது திருமனத்தின் சட்டத்தால் உருவான உறவாக இருக்கும். இறைவனின் விருப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட உறவாக இருக்கும். வேறுபட்ட உடல் அமைப்பையும், சிந்தனைகளையும், உணர்வுகளையும், தகமைகளையும் கொண்ட இந்த ஆண் பெண் என்ற மனித வேறுபாடுகளை கணவனும் மனைவியும் நன்றாகவே புரிந்து அவரவர் பாத்திரத்தை மிகவும் பொறுப்போடும் தேவையோடும் வெளிப்படுத்துவார்கள். கனவன் தன் மனைவியான பெண்ணின் இயல்பான உணர்வுகள், தேவைகள், அவளுக்கே உரித்தான தனிப்பட்ட பண்புகள், திறமைகள், பலவீனங்கள் போன்றவற்றை புரியவும் அவற்றுக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் முற்படுவான். மனைவியும் இவ்வாறே நடந்துகொள்ள ஆரம்பிப்பாள். ஒருவர் மற்றவரை முழுமையாக ஏற்றுக்கொள்வார். பலங்களைப் போன்று பலவீனங்களையும் ஏற்றுக்கொள்வார்கள். ஒன்றை ஏற்று மற்றதை வெறுத்துவிட்ட மனநிலையில் இவர்கள் வாழ மாட்டார்கள். தவறுகள், பிழைகள், போலியான எண்ணங்கள் இருந்தால் அவை முறையாக சுட்டிக்காட்டப்பட்டு அவற்றிலிருந்து மீண்டு புதிய அனுபவங்களைப்பெற்று முன்னேர ஆலோசனைகளை பரிமாரிக்கொள்வார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்படும் முரன்பாடுகள் அல்லது மனக்கசப்புகள் நீண்ட நேரம் நீடிக்க இடம்கொடுக்க மாட்டார்கள். ஒருவர் மற்றவரை சமாளித்து சிரிப்பால் அல்லது நடிப்பால் சேர்ந்து விடுவதற்கே முந்திக்கொள்வார்கள்.
சந்தோசம் அடைய வேண்டும் என்பதற்காக இவர்கள் உழைப்பார்கள், பல அர்ப்பணங்களைச் செய்வார்கள். சந்தோசம் என்பது திடீரென ஏற்படுவதொன்றல்ல என்பதை ஆழமாக புரிந்து வைத்திருப்பார்கள். அதற்கு தொடரான முயற்சி, அர்ப்பணிப்பு, திட்டமிடல், பொறுமை போன்ற குணங்கள் தேவை என்பதை புரிந்து அதை அடைய முயற்சிப்பார்கள். திருமணம் என்பது ஒரு தொழிலைப்போன்றதாகும். ஒரு தொழிலைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் நுட்பங்கள், தேடல், சிந்தனை, திறன்கள் போன்றன முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறே வெற்றிபெற்ற திருமணத்தை பூமியில் நிலைக்கச்செய்யவும் நுட்பங்கள், புதிய சிந்தனைகள், தேடல்கள் போன்றன பயன்படுத்தப்படவேண்டும்.
கலப்படம் இல்லாத காதல் அன்பான கணவனிடத்திலும் அழகான மனைவியிடத்திலும் நிரம்பிக் காணப்படும். உலகில் எது கிடைக்காவிட்டாலும் அன்பும் அரவனைப்பும் கிடைத்து நான் ஆழமாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டேன் என்ற உணர்வு ஏற்பட்டால் அதை விட பெருமதியானது எதுவாக இருக்கும். ‘வாழும் இடத்தை விட வாழும் விதமே இவர்களுக்கு மனஆறுதலைக்கொடுக்கும்’. இவ்வாறு உணர்வைப்புரிந்து, உறவை வளர்த்து வாழும் கணவன் மனைவியின் குழந்தைகள் அவர்களுக்கு கண் குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சமூகத்திற்கு பலம் நிறைந்த நன்கொடையாகவும் இருப்பார்கள்.
ஆரோக்கியமான குடும்பத்தின் ஆரம்பம், சிறந்த கலாச்சாரத்தின் ஆரம்பம், நல்ல சிந்தனையினதும் அறிவினதும் ஆரம்பம், தூய்மையான ஆன்மீகத்தின் ஆரம்பம், பாதுகாப்பு, அன்பு, அரவனைப்பு, மதிப்பு, புரிந்துணர்வு, ஒருமைப்பாடு போன்றவற்றின் ஆரம்பம் என்பன இவ்வாறான கணவன் மனைவியின் சுகமான இணைப்பிலிருந்துதான் வெளிவர ஆரம்பிக்கிறது.
ஒன்றுபட்ட கணவன் மனைவியின் உள்ளம்தான் குழந்தைகளின் முதல் பாதுகாப்பிடம், அதுதான் அவர்களின் முதலாவது புகழிடம், முதல் அறிவு தரும் பள்ளிக்கூடம், முதலாவது சந்தோசம் தரும் பூங்காவனம், வாழ்வின் ஆரம்ப அனுபவங்களை அனுபவிக்கும் இடம்.
இறைவனின் சட்டத்தால், ஆண் பெண் எனும் மனித உறவால் உருவான கனவன் மனைவி எனும் புனிதம் நிறைந்த பாத்திரங்கள் பக்குவமாக பாதுகாக்கப்படும் போது பண்பும், பாசமும் நிறைந்த உயர்வான மனிதர்களை இந்தச்சமூகத்திற்கு அன்பளிப்புச்செய்ய முடியும்.

Comments
Post a Comment