முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஒன்றின்அவசியம்: அந்த பணியை யார் முன்னின்று செய்வது ?
புதியதொருஅரசியல் கலாசாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு தற்போது ஆரம்பித்துள்ளதை உணர முடிகின்றது இதன் அடிப்படையில்தான் புதிய அரசியல் திட்டம் ஒன்றை வரைவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுகின்றன. இந்தவிடயம் சிறுபான்மை சமூகத்தினரிடையே ஒருபாரிய எதிபார்ப்புஒன்றை ஏர்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டமைப்பு (TNA) தமிழ்மக்களை ஒன்ரினைத்ததான தங்களின் வழமையான நேர்கோட்டில் பயணிக்கும்அதேவேளை பாரிய அளவிலான எந்த ஒரு சறுக்கல்களையும் அது சந்திக்கவில்லை காரணம் தமிழ்மக்களுக்கு புதிய அரசியல்திட்டம்ஊடாக அனைத்து விடயங்களையும் பெற்று கொடுப்பதில் தெளிவாக உள்ளது
TNA ஆனது யுத்த களத்தில் இருந்து உருவான பல்வேறு சிரிய தமிழ் கட்சிகளின் கூட்டு ஆகும் தமக்கிடையேயான பல்வேறு கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்த போதும் கூட போது தேவை கருதியும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் அடிப்படையிலும் ஒன்று பட்டு செயலாற்றுகின்றனர் இதனையே “வேற்றுமையில் ஒற்றுமை காணல்” என்று அரசியலில் கூறுவர்
வேற்றுமையில் ஒற்றுமை காணல் என்பது விட்டுக்கொடுத்தல் என்பதேயாகும் இது ஒரு இஸ்லாமிய வழிமுறை அந்த வழிமுறை எங்களால் புறக்கணிக்கப்பட இஸ்லாம் அல்லாதோர் கடைப்பிடித்து வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதற்கு தமிழ் கூட்டமைப்பு சிறந்த எடுத்துகாட்டாகும்
எங்களால் ஏன் முடியவில்லை ?
என்ற வினா நியாயமாக சிந்திக்கும் எல்லோர் மனதிலும் கனதியாக எழும். பின்வரும்காரணங்கள் இதற்கு காரணமாக அமையலாம்
தலைவர்களுக்கிடையிலான முரண்பாடுகள்
தலைமைதுவ கோட்பாடுகளை கடைபிடிக்காமை
முக்கிய உருபினர்களுக்கிடயிலான (keymembers) ஒற்றுமை இன்மை
கூட்டு முடிவுகளை கசிய விடுதல்
எதிராளிகளின் முகவராக(agent) தொழிற்படல்
விட்டுகொடுக்காமை
கதிரைகள்(power) மீதான மோகம்
சுயநலம்
சமூகத்தின்மீதான நீண்டகால அக்கறைகள் கவனத்தில் கொள்ளபடாமை
இவ்வாறான ஒருசூழ்நிலையில் மத்தியில்தான் புதிய யாப்பு உருவாக்கத்தற்கானபுறநகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்த புதிய அரசியல் திட்டத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் பாத்திரம் என்ன எவ்வாறான தீர்வுத்திட்டம் இதுவரையில் சமர்பிக்கப்பட்டுள்ளது அதன் உள்ளடக்கம் என்ன என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது
சிறுபான்மை தொடர்பிலான தீர்வுதிட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிந்திருத்தல் தொடர்பில் அவர்களின் கையிலேயே விடப்பட்டுள்ளது இதுதொடர்பில் TNA இன் நிலைப்பாடு இணைப்பு என்பதை தெளிவாக கூறிவிட்டனர் ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு இதற்கு மாறுபட்டது இவ்விணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதை பல்வேறு சிவில் அமைப்புகளின் மகாநாடுகள் மற்றும் ஒன்று கூடல்கள் தெளிவு படுத்தியுள்ள நிலையிலும் கூட எமது அரசியல் வாதிகளிடம் இருந்து சாதகமான பதில் இதுவரை தெளிவாக வரவில்லை அதற்கான காரணம் என்ன என்பது முக்கிய கேள்வியாகும்
இதுதொடர்பில் வடக்கு முதலமைச்சர்
“இணைந்த வடக்கு கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு ஒரு பிராந்தியம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்”
“முஸ்லிம்காங்கிரசிடம் நிபந்தனைகளுடனான இணைவு சாத்தியமாகும் என்ற கருத்து நிலவுகின்றது
ஆனால் இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது என்று கிழக்கு சிவில் சமூகம் விரும்புகிறது
எது எவ்வாறு இருப்பினும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய இத்தருணத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் உறைநிலை நிலைமையை மேலும் பாரதூரமாக்கும் என்பது தெளிவு எனவே இது விடயம் தொடர்பில் சிவில் சமூகம் அரசியல் வாதிகளை ஒன்றிணைக்கும் பொறிமுறையை (mechanism) உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்


Comments
Post a Comment