முல்லைத்தீவு குமுளமுனையில் மின்னொழுக்கினால் வீடு ஒன்று எரிந்து நாசம்.!

முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தில்  மின்னொழுக்கு காரணமாக வீடு ஒன்று எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 10 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட திடீர் மின்னொழுக்கு காரணமாகவே வீடு எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்துள்ள போதிலும் பாதுகாப்பாக வெளியேறியதன் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

சுகுமார் என்ற விவசாயின் வீடே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் இருந்த பணம் உழவியந்திர பெட்டி, விவசாய உபகரணங்கள்,  முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட சுமார் 15லட்ஷத்துக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து போயுள்ளது.

இக் குடும்பம் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள குடும்பம் என்பதோடு இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து தமது வாழ்க்கையை சீரமைத்து வரும் நேரத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டதால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கின்றனர்.



Comments