ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை ஹாஜிகளுக்கு பிரியாவிடை. (படங்கள்)

ஐக்கிய இராச்சிய கல்ஹின்னை நலன்புரி சங்கம,; ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்துடன் இணைந்து கடந்த வருடங்களைப் போன்று  இந்த வருடமும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஹஜ்ஜுக்காகப் புறப்பட இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகளுக்கு  வழி காட்டல் நிகழ்ச்சியும் பிரியாவிடையும் ஹெரோ இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் 20ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2016ல்  ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில்  அஷ் செய்க் ஆபித் கான் அவர்களும் அஷ் செய்க்  அப்துர் ரஹ்மான் ஹஸ்கிக் அவர்களும் ஆங்கிலத்திலும் அஷ் செய்க் ஷபீக் மௌலவி அவர்கள் தமிழிலும் ஹஜ்ஜின் சிறப்பு பற்றியும் மக்கா மதீனாவிலுள்ள புனிதத் தலங்கள் பற்றியும் ஹஜ் கடமையின் அவசியம் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.

அத்துடன் ஹஜ்  வழிகாட்டலில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த அல்ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்கள் ஹஜ் செய்யும் முறை பற்றியும் அவரது மூன்று தசாப்த்த கால ஹஜ் அனுபவங்கள் பற்றியும் விரிவாக விளக்களித்தார்கள்.

அல் ஹாஜ் ஸப்ரி ஸுபைர் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில்  ஹாஜிகளுக்கு புறுயு (ருமு) யின் தலைவர் அல் ஹாஜ் அக்பர் அவர்களால் ஹாஜிகளுக்கு ஹஜ் ஞாபகார்த்த விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹாஜிகளுக்கு இந் நிருவனத்தால் இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

இந்த வருடம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுமார் எழுபது இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தயாராகி இருக்கிறார்கள.; அதில் சுமார் ஐம்பது ஹாஜிமார்கள் லண்டனில் இலங்கை  முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் முன்னணி ஹஜ் உம்ரா நிருவனமான சுது வுசயஎநடள ரூ வுழரசள ல் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவைச் சேர்ந்த அனேகமான ஹாஜிகள்  இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன்   ஐக்கிய இராச்சியத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஹாஜிமார்கள் இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சந்தித்து ஸலாம் கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களது ஹஜ் பிரயாணத்தை இலேசாக்கி அதை கபூலாக்கி உயர்தரமான சுவனத்தை கூலியாக நல்குவானாக!

Comments