டிரக்டரின் கீழ் சிக்குண்டு சிறுமி பலி!

சியம்பலாண்டுவ நுகெவெவ – ஹடஓயா பிரதேசத்தில் டிரக்டரின் கீழ் சிக்குண்டு 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி, டிக்ரடரில் ஹடஓயா பிரதேசத்தில் இருந்து நுகேவெவ நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிரக்டரில் அமர்ந்து பயணித்த நிலையில் அதிலிருந்து கீழே விழுந்து டிரக்டரின் கீழ் அந்த சிறுமி சிக்கியுள்ளார்.

இதில் படுகாமடைந்த சிறுமி, சியம்பலாண்டுவ மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் டிரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments