யோஷிதவின் பாட்டிக்கு நோட்டீஸ்!
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டேசி பொரெஸ்ட் என்பவருக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் தொடர்ச்சியாக வாக்குமூலம் வழங்காது இழுத்தடித்து வருவதாகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் இன்று தெரிவித்திருந்தது.
ஆகவே அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்டா அத்தபத்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Comments
Post a Comment