மிரிஸ்வெவ கிராமத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள மீள் குடியேற்ற கிராமமான மிரிஸ்வெவ கிராமத்தில் சீ.டி.சீ.நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளி வாசல் இன்று (20) சீ.டி.சீ.நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அஸ்ஷேஹ் அமீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மிரிஸ்வெவ கிராமமக்கள் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக 01 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ரொட்டவெவ கிராமத்திற்கு சென்று வருவதாக சீ.டி.சீ.நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியமையினால் மக்களின் நலன் கருதியும் சிறார்களின் மார்க்க அறிவையும் மேம்படுத்துவதற்காகவே இப்பள்ளி வாசல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவ்வமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


Comments