மூதூர் கிழக்கு சம்பூரில் வைத்திய சாலை நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு


(ஏ.எம்.ஏ.பரீத்)

திருகோணமலை மாவட்டத்தில்  மூதூர்  கிழக்கு சம்பூர் பகுதியில் புதிய வைத்திய சாலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென 26 மில்லியன் ரூபா நிதியுதவியை  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

மூதூரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பகுதி மக்கள் இப்பகுதியில் ஒரு வைத்திய சாலை இன்றி பெரிதும் கஷ்டங்களை எதிர் நோக்கி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு இவ் வைத்திய சாலைக்கான நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வைத்திய சாலை ஒரு பிரதேச வைத்திய சாலையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments