புதைக்கப்பட்ட பெண் யானையை தோண்ட முயற்சித்தது மகிந்தரின் ஆள்
பின்னவல பகுதியில் இறந்து புதைக்கப்பட்ட பெண் யானை ஒன்றின் எச்சங்களை தோண்ட முற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய சப்ரகமுவ முதலமைச்சருக்கு நன்றாக தெரிந்த இருவர் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த யானை ஒன்றின் சடலத்தை, நேற்று முன்தினம் சிலர் தோண்டி எடுக்க முற்பட்டனர்.
எனினும் இந்த முயற்சி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்த யானையின் எச்சங்களை 15 இலட்சம் ரூபாவுக்கு வாங்க தயாராக இருந்ததாகவும், சந்தேகநபர்கள் இருவரும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் சப்ரகமுவ முதலமைச்சரிடம் பணி புரியும் இருவர் எனவும் குறிப்பிட்ட சந்திப் சமரசிங்க, இது குறித்த தகவல்கள் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Comments
Post a Comment