மனித குலத்திற்கு நல்வழி காட்டும் குர்ஆன்!
அல்லாஹ்வின் படைப்பான மனிதன் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்வதற்காகவே அல்குர்ஆனை இறக்கி வைத்தான். அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனை விளக்குவதற்கே மனித இனத்தில் இருந்து நபிமார்களையும், றஸ¤ல் மார்களையும் தெரிவு செய்து, மனித குலத்திற்கு நல்வழி காட்டினான். இதன் மூலம் சிறந்த மனித சமூக அமைப்பை உருவாக்கி உறவினர்களுடனும் இணைந்து வாழ வழிகாட்டினான்.
இஸ்லாம் உறவுகளைப் பேணி வளர்ப்பதில் முதல் இடத்தைப் பெறுகின்றது. உறவுகளையும், அயலவர்களையும் பேணி இணைந்து வாழ வேண்டும் என்பதை பின்வரும் திருமறை வசனம் எடுத்துக் காட்டுகிறது.
“மேலும் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் அவ்வாறே உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும் (அன்புடன்) உபகாரம் செய்யுங்கள்”
(அந்-நிஸா 36)
மேலும் இஸ்லாம் உறவுகளைப் பேணுவது சுவர்க்க வாதிகளின் பண்பு எனக் கூறுகின்றது. மேலும் நபி (ஸல்) ஒரு நபி மொழியில் மூன்று பேர் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள் எனக் கூறினார். அதில் ஒருவர் தினக் குடிகாரன். மற்றவர் உறவுகளைத் துண்டிப்பவர் எனக் கூறினார்கள்.
மேலும் இஸ்லாம் உறவுகளைப் பேணுவது சுவர்க்க வாதிகளின் பண்பு எனக் கூறுகிறது. மேலும் நபி (ஸல்) ஒரு நபி மொழியில் ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் உறவில்லாமல் இருப்பதை காபிர்களுக்கான அடையாளமாக கருதுகிறது.
மேலும், ஒருவரை ஒருவர் சந்தித்தால் புன்னகை புரிவதும். ஸலாம் கூறி உறவுகளை வளர்த்துக்கொள்ளும் செயலை ஒரு தர்மமாக (ஸதகா) இஸ்லாம் கருதுகிறது. உறவுகளைத் துண்டிக்காது இனபந்துக்களைப் பேணி நடக்க வேண்டும் என்பதை ஸ¤ரா அந்-நிஸாவில் அல்லாஹ் கூறுகின்றான்.
“மனிதர்களே இனபந்துக்களை (துண்டித்து விடுவதை)யும் நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.”
(ஸ¥ரா அத்.நிஸா-01)
மேலும் நபி (ஸல்) தனது அருள் மொழியாம் நபி மொழியில்
“உறவுகளை துண்டித்துக் கொள்ளாதீர்கள் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்து விடும் விடயங்களில் ஈடுபடாதீர்கள் ஒருவருக்கொருவர் கோபத்தையும், காழ்புணர்வையும் (பொறாமை) வளர்த்துக்கொள்ளாதீர்கள் நீங்கள் உங்களுக்கிடையில் சகோதரர்களாக இருங்கள்”
(புஹாரி)
எனக் கூறி உறவுகளை வலுப்படுத்துமாறு கூறி உள்ளார்கள்.
இன்று எமது சமுகத்தில் இந் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. தானும் தனது குடும்பமும் என்றும் உறவுகள் ஒரு வரையறைக்குள் உள்ளது. ஏதாவது நன்மையான அல்லது தீமையான (மரணம்) விடயங்களுக்கு மட்டும் ஒன்று கூடி கலையும் நிலையில் இன்று உறவுகள் காணப்படுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த உறவை எமக்கு கற்றுத் தரவில்லை.
குர்ஆனிலும், ஹதீஸ்களின் மூலமும் பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும், கணவன்-மனைவி உறவு பற்றியும், அயலவர்கள், நண்பர்கள் உறவு பற்றியும் கூறி உள்ளது.
ஆனால் இதை மறந்து சில பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கும் பிள்ளைகளை அநாதை இல்லங்களுக்கும் ஒப்படைத்து உறவுகளைத் துண்டித்துக் கொள்கின்றனர். மேலும் இஸ்லாம் ‘வாரிசுரிமைச்சட்டம்’ என்ற ஒன்றை ஏற்படுத்தி சொத்துப் பாகுபாட்டை சிறந்த முறையில் செய்யுமாறு வழிகாட்டி உள்ளது. ஆனால் பெண்களுக்கு சீதனம் எனும் போர்வையில் முழுவதையும் ஆண்கள் கொடுத்து மனம் வெந்து அந்த உறவே வேண்டாம் எனும் அளவு இன்று நமது முஸ்லிம் சமூகத்தில் சமுக நிலை காணப்படுகிறது. மேலும் உறவுகளைத் துண்டிக்கும் மற்றுமொரு அம்சமாக கடன், கொடுக்கல் வாங்கல் என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
உறவுகளைப் பேணிக்கொள்வதில் அயலவர்களும் முக்கிய பங்கைப் பெறுகின்றனர். இஸ்லாமும் அயலவர்களுடன் இருக்கும் முறை பற்றியும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை பற்றியும் தெளிவாக கூறுகிறது. பொதுவாக அயலவர்களை 3 வகையாக பிரித்து நோக்கலாம். இஸ்லாம் தனது வீட்டுக்கு நான்கு திசைகளிலும் இருந்து 40 வீடுகள் வரை தனது அயலவர்களை எல்லைப் படுத்தி உள்ளது.
1. உறவினர்களாக உள்ள முஸ்லிம்
2. உறவினர்ரல்லாத முஸ்லிம் அண்டை வீட்டார்
3. முஸ்லிம் அல்லாத அண்டை வீட்டார்.
மேற்கூறப்பட்ட எந்த வகையினராயினும் சரி சகோதர உணர்வோடும், அன்பு, பாசம், நீதி, நேர்மை போன்ற பண்புகளுடனும் நடந்து கொள்ள வேண்டும். அயலவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைபற்றிய பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) ஓர் இடத்தில்
“அண்டைவீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறாற உண்பவன் உண்மை முஸ்லிமல்ல”
எனக் கூறியுள்ளார்கள். மேலும் சமைக்கும் போது வழமையாக சமைப்பதை விட சற்று அதிகமாக சமைத்து அயலவர்களுக்கும் கொடுக்குமாறு வழி காட்டியுள்ளார்கள். சமையலுக்காக பயன்படுத்தும் வாசனைப் பொருட்களைக் குறைத்து சமயலை மேற்கொள்ளுமாறும் இஸ்லாம் கூறி உள்ளது. காரணம் வாசனையின் காரணமாக அயலவர் மனங்கள் துன்புறக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறி உள்ளார்கள்.
ஒரு முஸ்லிம் அயலவருடன் பின்வரும் முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறி உள்ளார்கள்.
o அயல் வீட்டார் தேவையுடைய வராய் இருந்தால் அவரது தேவையைப் பூர்த்தி செய்தல்.
o நோய்வாய்ப்பட்டால் நோய் விசாரித்தல்.
o கடன் கேட்டால் கடன் கொடுத்தல்.
o மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுத்தல்.
o வீட்டில் சமைப்பதை அவர் களுக்கும் கொடுத்து உதவுதல்.
o அயலவர்களின் அனுமதி இன்றி காற்றுப் புகாதவாறு சுவர்களைத் தடுத்தல்.
o அயலவர்கள் துன்புறும் வண்ணம் வானொலிகளை சத்தமாக போடாது இருத்தல்.
o அயலவர்களின் அமானிதப் பொருட்களைப் பாதுகாத்தல்.
o உயிர், பொருள், மானம், சொத்து என்பவற்றை பாது காத்தல்.
எனவே முஸ்லிம்களாகிய ஒவ் வொருவரும் நபி வழி நடந்து உறவுகளை துண்டிக்காது, இன பந்துக்களை விருத்தி செய்து இம்மையில் மகிழ்ச்சி பெறுவதோடு, மறுமையிலும் சுவர்க்கம் செல்ல முயற்சிசெய்வோம்!

Comments
Post a Comment