ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞருக்கு தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயிலின் BOUNTYLAB நிறுவனம் வேலை வழங்குகிறது.
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.
சிறந்த இணைய திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் குறித்த நிறுவனம் பிரபல தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயில் என்பவரால் நடாத்தப்பட்டு வருகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகிறது. இணைய வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்றுள்ள இந்நிறுவனம் பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்ப துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள பல இளைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
உலகிலே இன்று அறிவுப் பொருளாதாரம் அதிஉச்ச நிலையில் இருக்கின்ற காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறித்த இளைஞனுக்கு நல்ல தொழில்வாய்ப்பை எங்களுடைய நிறுவனத்தில் வழங்குவது என்று இதற்கு காரணம் பலவிருக்கிறது.
இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வழிசமைக்க கேட்டுக் கொள்கிறோம் என்று நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment