பொரலஸ்கமுவ பள்ளிக்கு உடனடியாக CCTV கமரா பொருத்த நடவடிக்கை
தாக்குதல்களுக்குள்ளான பொரலஸ்கமுவ பள்ளிவாசலுக்கு உடனடியாக சி.சி.ரி.வி. கமரா ஒன்றினைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ரிஸ்வி பரீன் கௌஸ் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தெற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் பெரேரா, பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பௌத்த குருமார்களையும் அழைத்து பொரலஸ்கமுவயில் கலந்துரையாடலொன்றினை நடத்தினார்.
இந்த நாடு சகல மக்களுக்கும் சொந்தமானதாகும். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன. முஸ்லிம்களும் பௌத்தர்களும் இந்நாட்டில் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
. மக்களை நல்வழிப்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்றார்.
அப்பகுதி மக்களும் பௌத்த குருமார்களும் முஸ்லிம்களும் தாம் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழ்வதாக உறுதியளித்தனர். பள்ளிவாசல்களைத் தாக்கியவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு பிரதேசத்திலுள்ள சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படாதுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் உடனடியாக சி.சி.ரி.வி கமரா பொருத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Comments
Post a Comment