கிண்ணியா மற்றும் மூதூர் ஆதார வைத்தியசாலைகளுக்கு CCTV கெமராக்கள் பொருத்த நடவடிக்கை
கிண்ணியா மற்றும் மூதூர் ஆதார வைத்தியசாலைகளுக்கு 05 மில்லியன் செலவில் சீ.சீ.டீ.வி கெமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முன்னால் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும்,சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
இரு வைத்தியசாலைகளின் தலைமை வைத்திய அத்தியட்சகர்கள் என்னிடம் விடுத்த வேண்டுகோளினையடுத்து நான் இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் கோரிக்கை விடுத்ததிற்கினங்க அவரின் விசேட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன்மூலம் இவ்விரு வைத்தியசாலைகளும் நவீனத்துமுடையதாக மாற்றமடையுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment