Helping Children Go Back To School நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக மாநாடும் திட்ட அறிமுக நிகழ்ச்சியும்

படங்கள்:- அனஸ் அப்பாஸ்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரனர்த்ங்களால் பாதிக்கப்பட்டு இதுவரை பாடசாலை உபகரண உதவிகளை பூரணமாகப் பெற்றிராத மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் முகமாக ஐiறுழசனள (Islamic Inspiring Words) ) எழுத்தாளர் இயக்கமும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கமும ((SLISM) ) இணைந்து மேற்;;கொண்டுவரும் Helping Children Go Back To School ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக மாநாடும் திட்ட அறிமுக நிகழ்ச்சியும் நேற்று ஆகஸ்ட் 16ம் திகதி பி.ப 5.30 முதல் பி.ப 6.30 வரை தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் விஷேட அதிதிகளாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், BCAS கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைவருமான அப்துர் ரஹ்மான், புரவலர் ஹாஷிம் உமர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு IiWords எழுத்தாளர் இயக்க உயர்மட்ட உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்க உயர்பீட உறுப்பினர்களும் ஊடக பிரமுகர்களும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் வரவேற்புரையை நிகழ்த்திய IiWords எழுத்தாளர் இயக்கத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஸெனீபா ஸனீர் அவர்கள், இந்நிகழச்சித் திட்டத்தின் பின்னணியையும் அதற்கான நிதிதிரட்டிய முறைமையையும் தனதுரையில் சுட்டிக் காட்டினார். டுயரnஉhபுழழன நிதிசேகரிப்பு தளத்தினூடாக கடந்தமாதத்தில் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக சுமார் 11 இலட்சம் ரூபா நிதிசேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்த அறிமுகத்தை அதன் தேசியத் தலைவர் எம்.எல்.எம் தௌபீக் நிகழ்த்தியதுடன் இத்திட்டஅமுலாக்கல் முறைமைகுறித்து அவ்வமைப்பின் பொது உறவுப் பகுதிப் பொறுப்பாளரும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளருமான முஆஸ் அஹமட் விளக்கமளித்தார். இதன் போது அவர் 350 மாணவர்களுக்கு தலா 4000 பெறுமதியான பாடசாலை உபகரணப் பொதிகளை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவற்றில் 210 பொதிகளை கொழும்பு மாவட்ட மாணவர்களுக்காகவும் 140 பொதிகளை அரநாயக்க பிரதேச மாணவர்களுக்காவும் ஒதுக்கியுள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் உரைநிகழ்த்தியவிஷேட அதிதிகள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுமதி குறித்தும் வெற்றிகரமான அமுலாக்கல் முறைமைகுறித்தும் பாராட்டிப் பேசியதோடு இந்நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடு செய்த இரு இயக்கங்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இம்மாநாட்டின் விஷேட அம்சமாக IiWords எழுத்தாளர் இயக்கத்தின் இந் நிகழ்ச்சித் திட்டத்திற்காக சேகரிக்கப்பட்ட பணத்தொகையை காசோலை மூலமாக விஷேட அதிதிகள் முன்னிலையில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இம்மாநாடு ஸ்ரீ லங்கா இஸ்லாமியமாணவர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் றுடானி ஸாஹிரின்  நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.





Comments