http://www.hirunews.lk/Data/News_Images/201608/1471849022_8833866_hirunews_cild-1copycopy.jpg

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸாருக்கு தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில், அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

கூலி தொழிலாளிகளான அந்த சிறுமியின் பெற்றோர், வேலைக்கு சென்றுவிடும் சூழ்நிலையில் அதே வீட்டில் தங்கியிருக்கும் 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளான்.

அந்த சிறுமியின் உயிர் பிரிந்த 15 ஆம் திகதி அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விபரத்தை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அறிந்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதியன்று பாடசாலைக்கு செல்லாத அந்த சிறுமி 13 ஆம் திகதி பாடசாலைக்கு வந்ததாகவும், மற்ற மாணவ-மாணவிகளிடம் சகஜமாக பழகும் இயல்பு கொண்ட அவர், அன்றைய தினம் சோகமாக காணப்பட்டதாகவும், யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும் பாடசாலையில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அந்த 12 வயது சிறுவனை தற்போது கைது செய்துள்ள பொலிஸார், அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments