கோல்பேசில் தாய், தந்தையுடன் இருந்த குழந்தை கடத்தப்பட்டது.... இறுதியில் மகிழ்ச்சி. l

காலிமுகத்திடலில் இருந்து 10 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கிருளப்பனையைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகbநபரே பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் கடந்த 2ஆம் திகதி தாய், தந்தையுடன் இருந்த குழந்தை காணாமல் போனது. இது தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் குழந்தையின் தாய் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டையடுத்து துரித புலனாய்வு விசாரணையை முன்னெடுத்திருந்த பொலிஸாருக்கு, நபரொருவர் குழந்தையுடன் சிலாபம் பிரதேசத்தில் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸார், நேற்று புதன்கிழமை இரவு சந்தேகநபதை கைதுசெய்ததுடன் குழந்தையையும் மீட்டனர்.

சந்தேகநபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments