அஹமட் முனவ்வர் தொகுத்த “இலங்கை வானொலி முஸ்லிம் சேவை” எனும் நூல் வெளியீடு (Photo)

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நீண்ட காலம் சேவையாற்றிய அல்-ஹாஜ் அஹமட் முனவ்வர் தொகுத்த இலங்கை வானொலி முஸ்லிம் சேவை எனும் நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக் கிழமை (07) கொழும்பு-07 இல் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் விஷேட அதிதிகளாக மலேசியாவின் அஷ்-ஷெய்க் மௌலானா முஹமட் அப்துல் காதிர், சிங்கப்பூரின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், சமூக சேவகரும் வர்த்தக ஆரோசகருமான அல்-ஹாஜ் எம். ஷெய்யத் ஜஹர்ங்கிர், தமிழ் நாடு ஹாஜரா நிறுவனத்தின் றஹ்மதுல்லா ஆலிம் இப்னு சம்சுடீன் ஆலிம் அமைச்சர்களான மனோ கணேசன், பைசர் முஸ்தபா, றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருடன் பல கல்விமான்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நூலாய்வினை எம்.ஜே.எம். மன்சூர் (நளீமி) வழங்கினார்.
இதன்போது ரமாழான் இப்பதார் நிகழ்வு சி. டி. இருவெட்டின் முதற் பிரதியை மசூர் மௌலானா அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடமிருந்து பெறுவதையும், நூலின் முதற் பிரதியை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடமிருந்து சமுகசேவையாளரும் பிரபல வர்த்தகருமான முஸ்லிம் சலாஹூதீன் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம். இதன்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தமது பங்களிப்புக்களை வழங்கிய சங்கை மிக்க உலமாக்களுக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிளிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











Comments
Post a Comment