அடிக்கடி சண்டை போட்ட மனைவிக்கு கணவன் செய்த வேலை.. இப்படியெல்லாமா பழி வாங்குவாங்க. #revenge
இந்தியா-
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஏராளமான தொலைபேசி எண்களிலிருந்து, செக்ஸ் உறவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
.
விசாரணையை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், ஆபாச இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து, அந்த பெண்ணின் தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
.
அதன் மூலம், அந்த இடத்தின் முகவரியை கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், புகார் கொடுத்த அந்த பெண்ணின் முகவரியும், அந்த முகவரியும் ஒன்றாக இருந்தது.
.
எனவே நேராக அவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது, அந்த பெண்ணின் கணவரின் லேப்டாப்பிலிருந்துதான், ஆபாச இணையதளத்தில் அவரின் எண் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், தன்னுடைய மனைவி தன்னிடம் அடிக்கடி சண்டை போடுவதால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், அவரை பழிவாங்குவதற்காக இந்த செயலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. .
..


Comments
Post a Comment