தர்கா நகரில் ஏற்பட்ட பதற்றம் : STF குவிப்பு

களுத்துறை தர்கா நகரில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நகரில் இன்று மாலை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகையடிக்கப்பட்ட போது, அந்த புகை உணவகங்களில் உள்ள உணவுகளில் பட்டதாக கூறி, உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுகாதார பரிசோதகர் மற்றும் தொழிலாளிகளை கடைக்குள் போட்டு பூட்டியுள்ளார்.

பொலிஸார் தலையிட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments