(Video இணைப்பு) அவிசாவளை வீடொன்றில் சிக்கிய நேபாள பெண்கள்.

மோசடி குழுவொன்றினால் நேபாள நாட்டு பெண்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்து இங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பும் சுட்சமமான மனித கடத்தல் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளது.

அவிசாவளை கருமாந்தபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை நேபாள நாட்டு பெண்களை தடுத்து வைக்கும் இரகசிய முகாமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

பலவந்தமாக தடுத்து வைத்திருந்த நேபாள நாட்டு பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்று இந்த மோசடி தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகளும் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த மோசடிக்கு பிரதானியாக நேபாள நாட்டு பெண் ஒருவர் ஈடுபட்டு வந்துள்ளதுடன், இதற்கு இலங்கையை சேர்ந்த நபரொருவரும் உதவியுள்ளார்.

குறித்த நேபாள நாட்டு பெண், இதற்கு முன்னர் இவ்வாறான மோசடி தொடர்பாக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார்.

எனினும் வேறு கடவுச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் அவர் இலங்கை வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த நேபாள நாட்டு பெண்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments