சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் VS கல்முனை பிர்லியன்ட் உதைபந்தாட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு
இன்று சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை பிர்லியன்ட் விளையட்டுக் கழக (கனிஸ்ட) அணிக்கும் இடையிலான சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்று சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது .
இந்தப்போட்டியின் முதல் பாதி முதல் இரண்டாம் பதி வரை விருவிருப்பான முறையில் இடம்பெற்றதனை காணக்கூடியதாக இருந்தது.
இந்தப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தங்களது பலத்தினை வெளிப்படுத்த எந்த அணியும் ஒரு கோலையும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக வீரர் தனது அணியை வெற்றியின் பக்கம் ஈட்டுச் செல்ல முதலாவது கோலை போட்டார். ஆனாலும் இரண்டாவது பாதியின் இருதி நேரத்தில் பினாட்டி முறையில் கல்முனை பிர்லியன்ட் விளையட்டுக் கழக (கனிஸ்ட) வீரர் ஓருவர் கோலை போட 1 : 1 என்ற கணக்கில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.



Comments
Post a Comment