தகவலுக்கு நன்றி – பாலாஜி விஸ்வநாதன். பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது. உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது ஆட்டு இறைச்சி. வெறும் சதை இறைச்சியை மட்டும் உண்பதை தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிட பழகுங்கள் இது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும். ஆட்டின் நாக்கு. உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது ஆட்டிறைச்சி, பின் நூறு வருஷம் எளிது தானே!!! (பி.கு: தண்ணியடிச்சுட்டு சைடுடிஷ்க்கு இத சேத்தி சாப்பிடுவது எல்லாம் உடல் நலத்துக்கு ஒத்துவராது!! ) ஆட்டின் சிறுநீரகம். இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும். ஆட்டின்  கொழுப்பு. ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். ஆட்டின் நுரையீரல். உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும். ஆட்டின்  இதயம். இதயத்திற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம். ஆட்டின் மார்பு. கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும். ஆட்டின் மூளை. கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம். ஆட்டின்கண். பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். ஆட்டுக்கால்கள். ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும் ஆட்டு தலை. இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும். இது போன்ற நல்ல பல தகவல்களை www.makkalnanpan.com மக்கள் நண்பன் என்ற எங்களது இணையத்தளதில் நீங்கள் வாசித்தறிந்து கொள்ளும் போது அதன் மூலம் நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவை உங்களோடு மாத்திரம் இருத்தி சுயநலவாதிகளாக இல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும், ஏனையோருக்கும் இத்தகவலைப் பகிர்ந்து நன்மைகளைத் தேடிக் கொள்ளுங்கள்.

தோப்பூர் அல்லை குளத்தின் புனர் நிர்மாண பணிகள் தற்போது இடம் பெற்று வருகின்றது.இந்நிலையில் குறித்த குளத்திற்கு அருகாமையில் இருக்கின்ற சிலர் தங்களது காணி உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளுக்கு மேலதிகமாக காணிகளை பிடித்திருப்பதாகவும் பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த அல்லை குளத்திற்கு அருகாமையில் இருக்கின்ற காணிச் சொந்தக்காரர்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் மற்றும் திருகோணமலை மாவட்ட நீர்பாசண திணைக்கள அதிகாரி எம்.அஸார் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (02) மாலை தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணிச் சொந்தக்காரர்கள் தாங்கள் அத்து மீறி காணிகளை பிடிக்க வில்லையெனவும் அவ்வாறு நாங்கள் பிடித்திருந்தால் குளத்தின் வரை படத்தினையும் எங்களது காணி உறுதிப் பத்திரத்தையும் சோதனையிட்டு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உங்களது காணிகளை பரித்தெடுப்பது எங்களது நோக்கமல்ல உங்களோடு சுமுகமாக பேசி இப் பிரச்சினை தீர்த்து வைப்பதுதான் உண்மையான நோக்கம்.தோப்பூர் அல்லைக் குளம் புனரமைக்கப்படுமாக இருந்தால் உங்களது ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மைகளுக்கு நீர் கிடைப்பதோடு விவசாயிகள் இதன் மூலம் நன்மையடைவர்.

அத்தோடு இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க வேண்டுமாக இருந்தால் வருகின்ற ஒரு வாரத்திற்குள் உங்களது காணி உறுதி பத்திரங்களை மாவட்ட பொறியியலாளரிடம் ஒப்படையுங்கள் இதனை பரிசோதித்து உங்களது காணி உறுதி பத்திரத்தில் உள்ளவாறு உங்களது காணி உங்களக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என்றார்.

இவ் கலந்துரையாடலில் தோப்பூர் பிரதேச விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,மூதூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எச்.ஹாஜாமுகைதீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Comments