மரண தண்டனைக்கு காத்திருக்கும் 1000 கைதிகள்!

சிறையிலுள்ள மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1000 பேரையும் தாண்டியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதப் படுகொலைகள், போதைப் பொருள் குற்றச்சாட்டு என்பன தொடர்பில்  நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் கண்டவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 1017 பேர் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த டனசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வாறு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களில் 667 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் வாரத்துக்கு ஒரு முறை பார்வையிட முடியும். இத்தகைய கைதிகளுக்கு சிறைச்சாலைக்குள்ளேயே உணவு வழங்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

1977 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments