காணமல் போன 12 மாணவர்களும் மீட்பு!

உலக முடிவை பார்வையிடச் சென்ற நிலையில் காணாமல் போன 12 பாடசாலை மாணவர்களும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

நானுஓய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கொலன்னாவ பகுதியில் இருந்து உயர்தர மாணவர்கள் 12 பேர் உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமல் போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படி இருப்பினும் அவர்கள் உலக முடிவின் வெளியேறும் வாயிலில் இருந்து பத்திரமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

Comments