12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய சந்தேகநபர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி ரஞ்சித் குமார் இன் று ஆஜரானதுடன் பிரதிவாதிகள் சார்பில் எவரும் ஆஜராகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Comments