Posted by
Kantalai News
எம்பியர் 13 வகையான பிளக்குகளுக்கே இனி அனுமதி ! ரவுண்ட் பிளக்குகளுக்கு தடை

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய ஜி பிளக்குகள் (G plug) என அழைக்கப்படும் எம்பியர் 13 வகையான பிளக்குகளே (13 ampere plug) தேசிய தரம் வாய்ததாக கொள்ளப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது.
இதன்படி வட்டவடிவமாக பிளக்குகளுடன் கூடிய (round pin plug) மின் உபகரணங்கள் பயன்படுத்துவதே, விற்பனை செய்யப்படுவதோ தடைசெய்யப்பட்டுள்ளன.
மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
