14 வயது சிறுமி மாயம் 30 வயது இளைஞன் கைது!

பொகவந்தலாவ – ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை மாணவியை கடத்தியதாக கூறப்படும் கண்டி – கலகா பகுதியை சோ்ந்த 30 வயது இளைஞரின் தாய் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த இளைஞன், அவரின் தாய் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் தொடர்புபட்டிருப்பதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த இளைஞன் மற்றும் பாடசாலை மாணவியையும் தேடும் நடவடிக்கையில் பொகவந்தலாவ பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments