நான்கு வயது சிறுமி கொலை! 16 வயது சிறுவன் கைது!
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணிக் கிராமத்தில், ஜெஹதீஸ்வரன் அஜந்தா எனும் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நீலாங்கேணி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை இம்மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
குறித்த சிறுமியை காணவில்லையென அவரது பெற்றோரும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதே சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக புதைக்கப்பட்டமை தெரியவந்தது.

Comments
Post a Comment