18,883 பேர் வடக்கில் உடல் ஊனமடைந்தவர்கள்!
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் வடக்கில் 18,883 பேர் வலது குறைந்தவர்களாகியுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் 4163 பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
ஏனையவர்களுக்கு வட மாகாண சபையினூடாக மாதாந்த கொடுப்பனவு வழங்க முடியுமான போதும் அது வழங்கப்படவில்லை.
இந்த வருடத்தில் நாடுபூராகவும் 30096 வலது குறைந்தவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
அடுத்த வருடம் மேலும் 39,758 வலது குறைந்தவர்களுக்கு கொடுப்பனவு வழங்க உத்தேசித்துள்ளோம்.
இதற்கு 2017 வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment