மஹியங்கனை விபத்தில் 2 பேர் பலி! 8 பேர் காயம்!

பதுளை மஹியங்கனை வீதியில் தம்பராவ பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11. 00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றூந்து மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள், சிற்றூர்ந்தின் சாரதியும் அதில் பயணித்த மேலும் ஒரு பெண்ணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் சாரதியை மஹியங்கனை காவற்துறை கைது செய்துள்ளதுடன், அவர் மஹியங்கனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Comments