எச்சரிக்கை! வட மாகாணத்தில் 2291 டெங்கு நோயாளர்கள்!

வட மாகாணத்தில் 2291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வட மாகாண டெங்கு ஒழிப்பு வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்,கே.தீஷ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

டெங்கு நோய் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும்  தற்போதைய நிலையில் வட மாகாணத்தில் அதாவது யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1753 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments