தமிழ் அரசியல் கைதிகள் 25 பேர் போராட்டம்!

இரண்டாம் தினமாக அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம் பெற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் 25 தமிழ் அரசியல் கைதிகள்  ஈடுபட்டுள்ளதாகவும், தங்களின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது வழக்கு விசாரணைகளை தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதில்  தாமதம் ஏற்பட்டுள்ளமையாலேயே மீண்டும் அவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments