நாட்டை வந்தடைந்த 30 இலங்கையர்கள்!

ஜப்பானில் சட்ட விரோதமாக  தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments