இலங்கை தூதுவர் தாக்குதலில் 5 பேர் அதிரடி கைது!

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது  மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சில நபர்களால் நேற்று மாலை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலுக்கு உள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் எல்லோர் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவுக்கான இலங்கை தூதுவர்  தாக்கப்பட்ட வீடியோ கீழ் வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

Comments