அநுராதபுரத்தில் 600 ரூபா லஞ்சம் பெற்ற இரு பொலிசாருக்கு 03 வருட கடூழிய சிறை
சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த நபரிடம் 600 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மூன்றாண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஹபரணை, கல்லோயா பிரதேசத்தில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த நபரிடம் பலவந்தமாக பணத்தை பெற்றதாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த நேரம் இதனை செய்துள்ளதாக கண்டறியப்பட்டதை அடுத்து, பொலிஸ்மா அதிபர் இவர்களை பொலிஸ் சேவையில் இருந்து நீக்கினார்.
நீண்ட கால வழக்கு விசாரணைகளின் பின்னர், இன்று வழக்கின் தீர்ப்பை வழங்கிய அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேகல, குற்றவாளிகளுக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதனை தவிர இருவரும் தலா 5 ஆயிரம் ரூபா அபராத தொகையை செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments
Post a Comment