யானை தாக்கி 65வயதுடைய பெண் பலி!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 6.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
65வயதுடைய முத்துலிங்கம் ஜானகியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் அதிகாலை மீன் வாங்கிக் கொண்டு வரும் வழியில் விலாம் மரம் ஒன்றுக்குச் சென்று விலாம் பழம் புறக்குவதற்குச் சென்ற போது, மரத்திற்கு பக்கத்திலிருந்த யானையே இப் பெண்ணை தாக்கியுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முத்துலிங்கம் கௌசல்யா என்ற மகள் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment