73 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனை!

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இரு தினங்களில் 73 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.

அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 16 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 29 பேரும், வவுனியா மாவட்டத்தில் 05 பேரும், மன்னார் மாவட்டத்தில் 04 பேருமாக 73 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments