வாஸ் குணவர்தன உட்பட 8 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வர் மற்றும் மனைவி ஆகியோர் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 6,7 மற்றும் 8ம் திகதிகளில் இடம்பெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மாலபே தகவல் தொழிநுட்ப வித்தியாலய மாணவர் ஒருவரை கடத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments