95 ரூபாவுக்கு மேல் சீனியை விற்றால் நடவடிக்கை!

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க இவ்வாறு அறிவித்துள்ளார்.

சீனி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 95 ரூபாவாகும். அதற்கும் மேல் வர்த்தகர்கள் அதனை விற்பதாக அறியக் கிடைக்கின்றது.

அவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.

Comments