அனுராதபுரம் சிறை கைதிகள் உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறையில் உள்ள கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் இன்றும் தொடர்ந்து இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார்.

தமக்கு எதிராக இடம்பெறுகின்ற வழக்குகளை விரைவுபடுத்தக் கோரி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படுகின்ற உணவுகளை உட்கொள்ள மறுப்பதாக அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் 20 கைதிகள் இணைந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளதாக துஷார உபுல்தெனிய கூறினார்.

எவ்வாறாயினும் அதற்காக தமது திணைக்களம் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

Comments