சமரசேகரவின் ஓய்வுக்கு முன்பே கொண்டு செல்லப்பட்ட தாஜூடின் உடற் பாகங்கள்!
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் உடற் பாகங்கள் சில மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளதாக, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
தாஜூடினின் உடற்பாகங்கள் சில காணாமல் போன சம்பவம் தொடர்பில், கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இதன் நிமித்தம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதன்போது தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும், வாக்குமூலம் அளித்தவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் ஆனந்த சமரசேகர ஓய்வு பெற சில தினங்களுக்கு முன்னர், குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த உடற் பாகங்கள் அடங்கிய 15 பொதிகள் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது எனவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த பொதிகள் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment