வடக்கில் உள்ள இராணுவ பாதுகாப்பு பிரதேசங்களில் பாரிய மனித புதைகுழிகள்?
வடக்கில் தற்போது இராணுவம் கையகப்படுத்தியுள்ள பகுதிகளிலேயே இறுதி யுத்தம் நடைப்பெற்ற காலப்பகுதியிலும் முன்னரும் யுத்தத்திற்கு பின்னரும் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் காணாமல் ஆக்கியவர்களின் சடலங்கள் யுத்தத்தில் தாக்குதலின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்களுடன் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே இப் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இராணுவம் இருப்பாதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த காணிகளை தற்போதுள்ள சூழ்நிலையில் விடுவிக்கப்பட்டால் புதைகுழி விபரம் வெளிவரலாம் அதன் மூலம் முன்னைய அரசின் ஆட்சியாளர்களுக்கும் நாட்டிற்கும் பாரிய சர்வதேச அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதோடு சில வேளைகளில் தமிழ் மக்களுக்கான தனி நாடு சர்வதேச நாடுகளால் உருவாக்கக்கூடிய நிலை தோன்றலாம் எனவும் இதனால் முன்னைய ஆட்சியினரின் கட்டளைகளை சர்வதேச சட்டத்திற்கு எதிராக அமுல்படுத்திய அத்தனை இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் கடுமையான தண்டனையை பெறவேண்டிவரலாம் என்ற கடும் அச்ச நிலையால் தற்போதைய அரசும் முன்னைய ஆட்சியாளர்களை இவ்வாரான குற்றத்தில் இருந்து காப்பாற்றவே இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படும் தோரணையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை தேசிய பாதுகாப்பு காரணத்தை காட்டி புதைகுழிகள் இருக்குமிடங்களை பாதுகாத்து கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த வாரம் விமல்வீரவன்ச கண்டி பௌத்த மகாநாயக்கரை சந்திக்க வருகை தந்ததும் முன்னைய ஆட்சியாளர்களின் ஏற்பாடகவே இருக்கும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இனவாத அடிப்படையில் ஓர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த இனவாதிகளுக்கு மகாநாயக்கரின் பதிலடியின் காரணமாக திட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக தெரியவருகின்றது.
பாரிய புதைகுழிகள் சம்பந்தப்பட்ட விடயம் இராணுவம் வசமுள்ள தனியார் காணிகள் முழுதும் மக்கள் வசப்பட்டால் மாத்திரமே உறுதிபடுத்தபடலாம் அதுவரை அரசின் மறுப்பு அறிக்கையை நம்பித்தான் ஆக வேண்டும் இது தமிழ் மக்களின் தலைவிதியாகும்.

Comments
Post a Comment