ஒரு வருட காலமாக சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஒரு வருட காலத்திற்கும் அதிகமான காலப் பகுதிகள் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்நேவ – மல்படிகல பிரதேசத்தினை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கொலை ஒன்றுடன் தொடர்பு உடையவராக இருந்த நிலையில், கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என கல்நேவ காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெகிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments