புதிய அரசாங்கம் குறித்து பெசில்!

இலங்கையின் உயர்ஸ்தானிகர் மலேசியாவில் தாக்கப்பட்டமை தொடர்பில் துரிதமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேசிய சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான மனு ஒன்றை அவர்கள், கொழும்பில் உள்ள மலேசியாவின் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்து கையளித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் 65-வது வருட நிறைவு மாநாட்டை குழப்புவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய பேச்சாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு இடம்பெறும் தினத்தில் மக்களின் அவதானத்தை திருப்பும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஒருவர் ஏதேனும் ஒரு நாட்டில் புலம்பெயர்ந்தோரால் தாக்குதலுக்கு உள்ளானாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விகாரைகளில் உள்நுழைந்து தேரர்கள் தாக்கப்பட்டார்களா?இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்றதன் பின்னர் பயங்கரமான அடிப்படைவாதிகள் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, எதிர்வரும் காலத்தில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

Comments