சிப்பி தொழிலின் தற்காலிக தடையை நீக்க கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்
கிண்ணியாவின் பாரம்பரிய தொழிலான சிப்பி தொழிலின் தற்காலிக தடையை நீக்க கோரி 29-08-2016 கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் செய்யப்பட்டது.
மேற்படி தொழிலானது சுமார் 25 வருட காலமாக மக்களால் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் கடலில் உள்ள சிப்பிகளை அகழ்ந்து எடுத்து அதனை அரச அங்கீகாரத்துகுட்பட்ட முறையாக அனுமதிபத்திரம் எடுத்த தொழிலாளர்களிடம் ஒப்படைத்து அதனை துகள்களாக்கி ஏற்றுமதி செய்து தங்களது ஜீவனோபாயத்தை நடத்திவந்தார்கள்.
இடைநிறுத்தி வைக்கபட்டிருந்த மேற்படி தொழில் நிமித்தம் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது அன்றாட செலவுக்கு கஷ்டபட்டவர்களாக திண்டாடிகொண்டிருக்கிரார்கள்.

Comments
Post a Comment