பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் : தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம்
பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. எவ்விதமான கரிசனையுமற்ற வகையில் 64 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்பில் எம்மை அடைத்து துன்புறுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இந்தக் குடியிருப்பு தொகுதியை வர்த்தக நடவடிக்கைககளுக்காக பயன்படுத்திக்கொண்டு முதியோரையும் சிறுவர்களையும் அநாதரவாகவே பலரும் முயற்சிக்கின்றனர். குறித்த விவகாரத்தில் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் எனவும் அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பம்பலப் பிட்டி குடியிருப்பு நலன்புரி சங்கத் தலைவர் என்.ரகுநந்தன், பம்பலப்பிட்டியில் வசிக்கின்ற சுமார் 300 குடும்பங்கள் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் பல தொகுதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மக்களை தற்போது புதிய வேலைத்திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்குள் 64 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்குள் முடக்க வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இரு தலைமுறைகளுக்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த மக்களை எவ்விதமான தூரநோக்குமின்றி ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்குள் முடக்க நினைப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
மேலும் புதிய வீடமைப்புத் திட்டம் மூலமாக எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படாது என்பது எமக்குத் தெரியும். அவ்வாறிருக்கும் போது இத்திட்டத்தை ஆரம் பிப்பதற்கு ஏன் இவ்வாறு பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள் என்பது தெரியாமலுள்ளது.
கொழும்பு மாநகர சபை மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை போன்றவற்றின் ஊடாக அடிக்கடி அறிவித்தல்களும் அனுப்பப்படுகின்றனர். இவை எல்லாம் சட்டத்துக்கு முரணானவையாகும். குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பல அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டும் எவையும் பயனளிக்கவில்லை. இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது.
எங்களது உரித்தின்றி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. குறித்த புதிய வீடமைப்புத் திட்டம் மூலம் சுமார் 1098க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்படைவர். முழு மையான எங்களது அடையாளமாக உள்ள இந்நிலத்தை சூறையாட முயற்சிக்க வேண்டாம்.
சிறுவர்களும் முதியோருமே அதிகமாக இக்குடியிருப்பில் உள்ளனர். அவர்களால் புதிய குடியிருப்பில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். இது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இந்த நிலப்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். அப்படியாயின் அதற்கு ஏன் எங்களது குடியிருப்பை தேர்ந்தெடுத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் கூடிய விரைவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்..

Comments
Post a Comment