இரட்டைக்கொலையின் சீ.சீ.ரி.வி ஆதாரம் சிக்கியது!
ஏறாவூரில் கடந்த வாரம் தாயும் மகளும் வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்தநிலையில், கொலை இடம்பெற்ற வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளொன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் உலாவித் திரிந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவ தினமான கடந்த 10ஆம் திகதி நள்ளிரவும் மறுநாள் காலையும் குறித்த மோட்டார் சைக்கிள், கொலை இடம்பெற்ற வீடு அமைந்துள்ள வீதியில் பலமுறை உலாவியமை, அருகிலுள்ள சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
எனினும் குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவில்லாத நிலையில், அது பற்றி கண்டுபிடிப்பதற்காக குறித்த காணொளி பதிவு மொறட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொலையுண்டவர்களது பிரேத பரிசோதனை, இன்றைய தினமே முன்னெடுக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment