நாளை நியுஸிலாந்து பயணிக்கும் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை நியுஸிலாந்துக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமர் ஜோன் கே யுடன் வர்த்தகம், பாதுகாப்பு, பிராந்திய பொருளாதாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பிரதமர் ஒருவர் நியுஸிலாந்துக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபுர்வ விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments