தேசிய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 03ம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்ததே தேசிய அரசாங்கம் என்று 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டும் மாத்திரம் இணைந்தது தேசிய அரசாங்கம் அல்ல என்று மனுதாரர் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட நீதிபதிகள் குழுவினர் குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது ஒக்டோபர் 03ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments
Post a Comment