நாட்டுமக்களை துன்பத்தில் ஆழ்த்தும் வெட் வரி!

அரசாங்கம் வெட் வரியை அதிகரிப்பதன் ஊடாக நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் வெட் வரியை36 சதவீதத்தால் அதிரித்துள்ளதாக அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமது வரி அதிகரிப்பு குறித்து மீளாய்வு செய்ய அரசாங்கத்துக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments